தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் பல முக்கிய விஷயங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து காணப்படும். உங்களது புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிக்க முடியும். பெற்றோர்கள் சந்தோஷமாக இருப்பர். தனவரவு ஓரளவு திருப்தியளிக்கும். மன அழுத்தும் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். வாகன செலவுகள் உண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். உடன் பிறப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவும். உறவினர்களிடம் வீண் சச்சரவுகள் ஏற்படலாம். பூர்விக சொத்து பிரச்சனை நல்ல ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com